அடுத்ததாக அவர் தனது சகோதரர் மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகவுள்ள ‘தனி ஒருவன் 2’ படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் மணிரத்னம் இயக்கவுள்ள பிரமாண்டமான படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அவர் அருள்மொழி வர்மன் பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்க்ரீன்சீன் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெயம் ரவி தொடர்ச்சியாக மூன்று படங்கள் நடிக்கவுள்ளதாகவும், அவற்றில் ஒன்று ‘என்றென்றும் புன்னகை’ இயக்குநர் அகமது இயக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனிடையே இந்த நிறுவனத்தில் அவர் நடிக்கும் இரண்டாவது படத்தை ராஜீவ் மேனன் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஜெயம் ரவி, இயக்குநர் ராஜீவ் மேனனை சந்தித்து கதை கேட்டதாகவும், கதை தனக்கு திருப்தி அளிப்பதாக கூறியதாகவும் தெரிகிறது.
ராஜீவ் மேனன் சமீபத்தில் இயக்கிய ‘சர்வம் தாளமயம்’ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது