யின் புதிய தலைவர் தெரிவுசெய்யப்படுவார் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) தமிழரசுக் கட்சியின் இளைஞரணிக்கான நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “எதிர்வரும் ஏப்ரல் 26 ஆம் திகதி தந்தை செல்வாவின் நினைவு நாள் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் பெரும் அரங்கு ஒன்று யாழ். மத்திய கல்லூரியில் இரா.சம்பந்தனால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இதையடுத்து 27ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் புதிய பொதுக்குழு இடம்பெறவுள்ளது. அந்த பொதுக்குழுவில் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உட்பட 50 பொதுக்குழுவினர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதன்போது எத்தகைய தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்பது குறித்து ஆராயவுள்ளோம். அத்துடன் 28ஆம் திகதி தமிழரசுக் கட்சி பேராளர் மாநாட்டில் அத்தகைய தீர்மானங்களின் பிரேரணைகள் ஆராயப்பட்டு மாநாட்டு தீர்மானங்களாக எடுக்கப்படும்.
அந்த தீர்மானங்களையொட்டி அன்று மாலை சங்கிலியன் பூங்காவில் இடம்பெறும் பொதுக்கூட்டத்தில் அவை அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.