சைட்டம் மருத்துவக் கல்லூரியின் மூன்று மருத்துவ பட்டதாரிகளால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று(செவ்வாய்கிழமை) உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, எல்.ரி.பீ. தெஹிதெனிய மற்றும் ப்ரீத்தி பத்மன் சூரசேன ஆகியோர் முன்னிலையில் பரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே சுகாதார அமைச்சினால் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, நிறைவுகாண் மருத்துவப் பயிற்சியை இடைநிறுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
இருதரப்பு சட்டத்தரணிகளாலும் முன்வைக்கப்பட்ட வாதங்களை கருத்திற்கொண்ட உயர் நீதிமன்றம், மனு மீதான விசாரணையை மே மாதம் 09ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.