கடந்த ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவார்களது ஆத்ம சாந்திக்காக திருகோணமலையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது
திருகோணமலை மாவட்ட தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சின்னவன் சிவகுமாரினால் அஞ்சலி நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.00 மணிக்கு திருகோணமலை கடற்கரையில் ஏற்பாடுசெய்யப்பட்டது
இதன்போது பொதுமக்கள் ஒன்றிணைந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் ஐ.எஸ்.ஐ.எஸ் என பெயர் எழுதப்பட்ட உருவம் பொறிக்கப்பட்ட கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
இதேவேளை திருகோணமலை உவர்மலை குழந்தை இயேசு ஆலய பங்கு மக்களாலும் அஞ்சலி நிகழ்வொன்று இன்று மாலை 6.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆலய முன்றலில் கூடிய பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி இறைவனைப் பிரார்த்தித்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பங்குத்தந்தை சுகுனேந்திரன் குரூஸ் அவர்கள், வன்முறைகள் அகற்றப்படவேண்டும் அதற்கான அனைத்து வழிகளையும் இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.