LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, April 10, 2019

பாலியல் தொழிலாளர்கள் பட்டியலில் பெயர் – அதிர்ச்சியடைந்த இளம் பெண்கள்!

பாலியல் தொழிலாளர்களின் பட்டியலில் தங்களது பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமையினை அறிந்த 26 பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

ரொறன்ரோவில் பாலியல் தொழிலாளிகளுக்கு உதவும் நோக்கில் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வு அமைத்து தருவதாக, RosedaleIr ஐ சேர்ந்த Leonie Tchatat என்ற பெண்ணும் அவரது கணவரான Guy Taffo இணைந்து அரசிடம் விண்ணப்பித்து 1.5 மில்லியன் டொலர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

La Passerelle என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த இரண்டு பெண்களிடம், பெண்கள் முன்னேற்றத்திற்காக ஒரு கூட்டமும் வேலைக்கான பயிற்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தங்கள் நண்பர்கள் பலரை அழைத்து வருமாறும் கூறப்பட்டது.

இதற்கமைய 2018ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி ரொறன்ரோவில் அமைந்துள்ள பெரிய விடுதி ஒன்றில் நடைபெற்ற அந்த கூட்டத்திற்கு 26 பெண்கள் வருகை தந்துள்ளனர்.

இதன்போது வருகை தந்த பெண்களுக்கு உணவு உண்பதற்காக ஒரு உணவு அட்டை வழங்கப்பட்டது. அவர்கள் 20 முதல் 25 டொலர்கள் மதிப்புள்ள உணவை உண்ணலாம் என அவர்களுக்கு கூறப்பட்டது.

பின்னர் அந்த பெண்களிடம் ஒரு விண்ணப்பப்படிவம் கொடுக்கப்பட்டது. அதில் அவர்கள் தங்கள் குறித்த விவரங்களை நிரப்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், 12 முதல் 17 வயதுக்குட்பட்ட பாலியல் தொழிலாளிகளுக்கு உதவும் நோக்கில் தன் அமைப்பு செயல்படுவதாக கூறி விண்ணப்பித்திருந்த Leonie Tchatatf சொந்தமான La Passerelle என்ற நிறுவனம், பின்னர் பணத்துக்காக ரகசியமாக உடலை முதலீடு செய்யும் இளம்பெண்களுக்கு உதவுவதாக மாற்றிக்கூறியது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய ஊடகம் ஒன்று குறித்த 26 பெண்களில் சிலரை சந்தித்து பேசியுள்ளது. தங்கள் பெயர்
பாலியல் தொழிலாளிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை அறிந்த அந்த பெண்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7