ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் "நாட்டிற்காக ஒன்றினைவோம்" என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றி ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டுவதற்கே இச்செயலமர்வு நடைபெற்றது அத்துடன் ஊடகவியலாளர்களின் ஆற்றல் மற்றும் அறிவை மேம்படுத்தும் விரிவுரைகளும் இங்கு இடம்பெற்றது இந்நிகழ்வை அரசாங்க தகவல் திணைக்களமும் இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து நடாத்தியது இந்நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் எல்.பி திலகரத்ன தகவல் திணைக்கள பணிப்பாளர் ஹர்ஷ ஜெயதிஸ்ஸ பத்திரிக்கை பேரவையின் உதவி ஆணையாளர் விஜயரத்ன நேத்ரா தொலைக்காட்சி உதவிப்பணிப்பாளர் மோசஸ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி மற்றும் வளவாளர்களாக தினகரன் பத்திரிக்கையின் சிரேஷ்ட ஆசிரியர்
செந்தில் வேலவன் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் இ.நவேஸ்வரன் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர் .