அத்துடன், காங்கிரஸ் கட்சியின் பல வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை என்றும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதவை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை குறித்து அவர் தெரிவிக்கையில், “மதச் சார்பின்மை என்ற பெயரில் காங்கிரஸ் போலித்தனமாக நடக்கின்றது. அத்துடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஆபத்தானது. இது மக்களை திசை திருப்பும் செயலாகும்.
பிரிவினைவாதிகள், நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் மீதான வழக்குகளில், அவர்கள் எளிதாக ஜாமின் பெறும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்ற காங்கிரஸின் அறிக்கை ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்தாக அமையும்.
மேலும், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதோடு தேர்தல் அறிக்கையில் ஆபத்தான வாக்குறுதிகளை அளித்துள்ள காங்கிரஸ் கட்சி அவற்றில் ஒன்றையும் நிறைவேற்றப் போவதில்லை. அவ்வாறு நிறைவேற்றினால் அது நாட்டுக்கே ஆபத்தாக அமைந்துவிடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.