மைகளை வெளிப்படுத்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு கிளிநாச்சி, விவேகாநந்தா நகர் பொதுநோக்கு மண்டப வளாகத்தில் இடம்பெற்றது.
இது, 2017ஆம் ஆண்டு உயர்தரம், 2018ஆம் ஆண்டு சாதரண தரம் மற்றும் தரம்-5 புலைமைப் பரிசில் பரீட்சைகளில் தோற்றி சாதனை நிலைநாட்டிய மற்றும் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் 90 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், 22 வறிய மாணவர்களிற்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் உறவினர் ஒருவரின் உதவியுடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கலந்துகொண்டதுடன், முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன், பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, குறித்த நிகழ்வில் திறைமையாக கற்பித்தலை மேற்கொண்ட ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.