ண்ட் ஆண்ட்ரே அவெலின் மற்றும் வால் டெஸ்மோனட்ஸ் ஆகிய பகுதிகளுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஒட்டாவா ஆற்றிலிருந்து அதிகரித்துவரும் தண்ணீர் காரணமாகவே, இவ்வாறு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தண்ணீர் அளவு உயரக்கூடும் என்பதால், அப்பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம், இப்பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும், நகராட்சியின் அறிக்கையின்படி, எதிர்வரும் நாட்களில் தண்ணீர் அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, இப்பகுதி மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு, மேயர் ஜோனேன் லாபாடி கேட்டுக்கொண்டுள்ளார்.