கண்டி கலை இலக்கிய ரசிகர் மன்றம்
மற்றும் " அகிலம் " அறிவியல்
சஞ்சிகையும் இணைந்து நடாத்திய "அகிலம்" வெள்ளி விழா - பவளவிழா சிறப்பு
மலர் வெளியீடும் மற்றும் மாபெரும் இலக்கிய பரிசுப்போட்டியில் திறந்த மட்ட நாடகப்பிரதி போட்டியில் இரண்டாம்
இடத்தையும் , கவிதை போட்டியில் மூன்றாம் இடத்தையும் மட்டக்களப்பை சேர்ந்த கலைமாமணி
கா.சிவலிங்கம் பெற்றுக்கொண்டார்
அகிலம் அறிவியல் சஞ்சிகையின் வெள்ளி
விழா மற்றும் பவள விழா ஆகியவற்றை சிறப்பிக்கும் முகமாக கடந்த 24 ஆம்
திகதி கண்டி திரித்துவ கல்லூரி மண்டபத்தில் இலக்கிய போட்டி பேராசிரியர் துறை.
மனோகரன் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக வடமத்திய
மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க விசேட பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் வி.எஸ்.
இராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்