இந்த சந்திப்பு இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபை உறுப்பினருமான உபாலி சமரசிங்கவின் தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்து.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக மக்கள் மத்தியில் விளக்கமளிக்கப்பட்டிருந்ததோடு தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பாகவும் மக்களிற்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் வடமத்திய மாகாணசபை உறுப்பினர் வசந்த சமரசிங்க, கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.