நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) மாலை 6 மணியளவில், லேக்சோர் வீதி மற்றும் டிராபல்கர் வீதிப் பகுதியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த கட்டிடத்திலிருந்து பலத்த காயங்களுடன் 60 வயதான பெண் ஒருவரை மீட்டெடுத்த தீயணைப்பு படையினர் உள்ளூர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இருந்த போதிலும் சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக ஹல்ட்டன் பிராந்திய பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த தீப்பரவலின்போது வேறு எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.