வத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வின்னிபெக் – ஓஸ்போர்ன் ஸ்ட்ரீட் நோர்டின் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் காயமடைந்திருந்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
21 வயதான இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.