வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலய நிர்வாக சபையினரின் ஏற்பாட்டில் வாழ்வாதார உதவித் தேவையுடைய குடும்பங்களுக்கு சித்திரைப் புத்தாண்டுக்கான புத்தாடைகள் வழங்கும் நிகழ்வு ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.ஆலய தலைவர் தா.யோகச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற புத்தாடை வழங்கும் நிகழ்வில் ஆலய நிருவாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இதன்போது ஐம்பத்தைந்து வறிய குடும்பங்களுக்கு சித்திரைப் புத்தாண்டுக்கான புத்தாடைகள் வழங்கி வைக்கப்பட்டது.