எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தேனியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோதே எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வரும் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்கும் நோக்கில் பணியாற்றுவோமெனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை அ.தி.மு.க- பா.ஜக கூட்டணி குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தகுதியில்லை எனவும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
மேலும் எதிர்க்கட்சியினர், பிரதமர் வேட்பாளர் யாரென தெரியாமலேயே வாக்கு சேகரித்து வருகின்றனரெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனாலும் மக்களுக்கான திட்டங்களை மத்திய- மாநில அரசு இணைந்து செயற்படுத்துமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.