யிடும் ராகுல் காந்தி, இம்முறை தென்னிந்தியாவில் உள்ள வயநாடு தொகுதியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், மோடியின் ஆட்சியால் தனிமைப்படுத்தப்பட்டதாக உணரும் தென்னிந்தியாவுடன் தான் இருப்பதை உணர்த்துவதற்காகவே இம்முறை வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி வகித்து வருகிறார். இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடும் அவர் கேரள மாநில காங்கிரஸ் பிரமுகர்களின் வலியுறுத்தலுக்கிணங்க அங்குள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடத் தீர்மானித்துள்ளார்.
அமேதி தொகுதி மக்களுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால் வாக்காளர்களின் கேள்விக் கணைகளை எதிர்கொள்ள பயந்தும், இங்கு மறுமுறை வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதாலும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதிக்கு ராகுல் காந்தி தப்பியோடியுள்ளதாக பா.ஜ.க. தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) ராகுல் காந்தி தெரிவிக்கையில், “காங்கிரஸ் கட்சியைக் கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஊழல் தொடர்பாக எங்களுடன் நேரடியாக விவாதம் செய்வதை அவர் தவிர்த்து வருகிறார். இந்த தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யக்கூடிய காரணியாக ஊழல், வேலை வாய்ப்பின்மை, விவசாயிகளின் துயரம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும்.
இதனிடையே, மோடியின் ஆட்சியால் தனிமைப்படுத்தப்பட்டதாக தென்னிந்தியா உணர்கின்றது. ‘உங்களுடன் நான் இருக்கிறேன்’ என்ற நம்பிக்கையை விதைப்பதற்காகவே இந்த முறை நான் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிடுகிறேன்” என்று அவர் கூறினார்.
இதேவேளை, வயநாடு தொகுதியில் போட்டியிடவுள்ள ராகுல் காந்தி, நாளை மறுதினம் அங்கு வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். அப்போது அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் கலந்துகொள்ளவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.