சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திலிருந்தே 9MM பிஸ்டலை இருவர் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
டவுன் ரவுண் ஹெலிஃபாக்ஸ் பகுதியில் வைத்தே குறித்த துப்பாக்கி திருடப்பட்டுள்ளது. சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்ட பூட்டப்பட்ட பெட்டியிலேயே குறித்த துப்பாக்கி இருந்தாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரானில்வில் வீதியிலுள்ள கண்காணிப்பு கமெராவின் உதவியுடன் திருடர்களை இனங்கண்டுள்ள பொலிஸார், தற்போது அவர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அத்தோடு திருட்டு சம்பவம் குறித்த கணொளியினையும் வெளியிட்டுள்ள பொலிஸார், இவர்களைத் தெரிந்தவர்கள் பொலிஸ் நிலையத்தில் அறியத்தருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.