தே மேடையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுபான விடுதி ஒன்றில், பிரித்தானிய நகைச்சுவையாளரான Ian Cognito (60) நிகழ்ச்சி செய்துகொண்டிருந்துள்ளார்.
5 நிமிட நிகழ்ச்சியில் திடீரென அப்படியே மயங்கி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துள்ளார்.
இதனை பார்த்த பொதுமக்கள் அனைவரும் இதுவும் நிகழ்ச்சியின் ஒரு பகுதி என நினைத்து ரசித்துள்ளனர்.
அப்பொழுது துடிதுடித்த அவர், மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயிர்காக்கும் ஊழியர்கள் முதலுதவி கொடுக்க ஆரம்பித்தனர். எனினும் துரதிஷ்டவசமாக அவர் மேடையிலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது பிரித்தானிய மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.