அலரி மாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “பொருளாதார வீழ்ச்சி, ஜனநாயக சீர்கேடு ஆகிய இரண்டும் ஆட்சி மாற்றத்தின்போது திருத்தியமைத்து வெற்றிக்கொள்ள வேண்டியதாக காணப்பட்டது.
பொருளாதார எழுச்சியும், தனிமனித ஜனநாயக உரிமைகளும் இன்று முன்னேற்றமடைந்து உறுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வுறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்த மாறுப்பட்ட அரசியல் கொள்கைகளில் இருந்து அனைவரும் விடுபட வேண்டும்.
அத்துடன் அரசியல் தலைவர்கள் தமது பிரதேசத்திற்கு மாத்திரம் வரையறுத்து அபிவிருத்திகளை முன்னெடுக்க கூடாது.
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தும் போது பல சவால்கள் காணப்பட்டன. பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தல் ஆகிய இரண்டு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டிய தேவை காணப்பட்டது.
இன்று அரசாங்கத்தின் குற்றங்களை பகிரங்கமாக விமர்சிக்கும் அளவிற்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.