கோட்டாபயவுக்கு குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டாலே இவ்வாறு தடையேற்படும் என சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
அமெரிக்க நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றதே தவிர, அவர் குற்றவாளி என்று இன்னமும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
வழக்கு விசாரணையின் பிரகாரம் அவர் குற்றவாளி என்று கருதப்பட்டு நீதிமன்றம் தண்டனை வழங்கினால் மாத்திரமே அவர் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதில் தடையேற்படும் என சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.