ர்வை எழுதிய தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த சஹானா என்ற மாணவி 600க்கு 524 மதிப்பெண் பெற்றுள்ளார்.
கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான இந்த பகுதியில், மின்விளக்கு இல்லாத ஒரு குடிசையில் வளர்ந்த இந்த மாணவி, இவ்வாறு மதிப்பெண்ணை எடுத்துள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்தன.
ஆனால் அதே நேரத்தில் மாணவி சஹானா மருத்துவம் படிக்க விரும்புவதாகவும், அவருக்கு பண உதவி தேவை என்றும் அவருடைய உறவினர்கள் பலர் டுவிட்டரில் பதிவு செய்தனர். இதனையடுத்து இந்த மாணவிக்கு உதவ பலரும் முன்வந்து மாணவியின் வங்கிக்கணக்கிற்கு பணத்தை அனுப்பி வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்த செய்தியை கேள்விப்பட்ட நடிகர் சிவகார்த்திகேயன், சஹானாவுக்கு மருத்துவம் உள்ளிட்ட எந்த படிப்பு படிக்க விருப்பப்பட்டாலும், அந்த படிப்புக்குரிய அத்தனை செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே சமீபத்தில் காலமான விவசாயி நெல் ஜெயராமன் மகனின் கல்வி செலவை சிவகார்திகேயன் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.