இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில், டிக்கோயா கிளங்கன் பகுதியைச் சேர்ந்த டி.எம்.ரம்பண்டா (வயது 59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஹட்டன் பிரதேசத்திலிருந்து மஸ்கெலியாவை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வளைவு பகுதியில் செல்லும்போது குடைசாய்ந்துள்ளது. இதன்போது அவ்விடத்தில் சென்றுக்கொண்டிருந்த குறித்த நபர் குடைசாய்ந்த முச்சக்கரவண்டி தன்னை மோதிவிடுமோ என பயத்தில் வீதியை விட்டு ஒதுங்கியபோதே பள்ளத்தில் வீழ்ந்துள்ளார்.
இவரை மீட்க முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் முயற்சித்தபோதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதணைக்காக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
மேலும் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக முச்சக்கரவண்டியின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்