LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, April 5, 2019

இந்திய மாணவிக்கு கனடாவில் கிடைத்துள்ள பெரும் அதிர்ஷ்டம்

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு கனடாவில் உள்ள விவசாயம் சார்ந்த நிறுவனத்தில் 1 கோடி ரூபாய்க்கு வேலை கிடைத்துள்ளது சக மாணவர்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் இளைஞர் பலரும் விவசாயத்தை விடுத்து பல்வேறு துறைகளில் கால்பதித்து வருகின்றனர். ஆனால் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கவிதா ஃபாமன் என்கிற மாணவி Lovely Professional Universityஇல் முதுகலை விவசாய படிப்பு எடுத்து படித்துள்ளார்.

படிப்பின் மீது அதிக ஆர்வமும் கற்றல் ஆற்றலும் அதிகமாக இருந்த காரணத்தால், கல்லூரியின் முதல் மாணவியாக கவிதா திகழ்ந்துள்ளார்.

இதனைப் பார்த்த கனடாவின் பெரிய விவசாய நிறுவனமான Monsanto Canada நிறுவனம் ஒன்று, நேர்காணல் நடத்தி கவிதாவை வருடம் ரூ.1 கோடி சம்பளத்தில் வேலைக்கு எடுத்துள்ளது. அங்கு அவர் வேளாண் இரசாயன உற்பத்தியை மேற்பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாணவர்கள் பலரின் கனவு நிறுவனமான இதில் கவிதாவிற்கு வேலை கிடைத்திருப்பது சக மாணவர்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து பேசிய கவிதா, “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வேலைக்கு சேரும் நேரத்திற்காக காத்திருக்கிறேன். கல்வியை கற்றுக்கொள்வதற்கும் கடினமாக உழைக்கிறவர்களுக்கும் விவசாயத்தில் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன என்பதை இது நிரூபிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7