மட்டக்களப்பு உளவியல்
ஆலோசனை மய்யத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு டச்பார் நாவலடி
கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அகற்றும் பணிகள் (07) மாலை முன்னெடுக்கப்பட்டது
கடற்கரையோர சூழல் பாதுகாப்பை உறுதி செய்வோம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ்
“ கடற்கரைகளை சுத்தம் செய்வோம் எனும் தொனிப்பொருளில் “ பல வேலைத்திட்டங்கள்
அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டு
வருகின்றது
இதன் கீழ் கிழக்கு மாகாணத்தின் கரையோர பாதுகாப்பு திட்டத்தின் ஊடாக பல வேலைத்திட்டங்கள் அரசால் நடைமுறைப்
படுத்தப்பட்டுள்ளது
இதற்கு அமைய மட்டக்களப்பு மாநகர சபையின் அனுமதியுடன் இலங்கை உளவியல் ஆலோசனை மய்யத்தின் சுற்றுப்புற சூழல் கட்டுப்பாடு மய்யத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு உளவியல் ஆலோசனை மய்ய கிளையினால்
மட்டக்களப்பு டச்பார் நாவலடி கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் கழிவு
பொருட்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது
மட்டக்களப்பு டச்பார் நாவலடி
கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அகற்றும் பணியில் மட்டக்களப்பு உளவியல் ஆலோசனை மய்யத்துடன் மட்டக்களப்பு இளைஞர் அமைப்புக்களின்
அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர் ,