ஹூரொன்டாரியோ வீதி மற்றும் செரமொனியல் ட்ரைவ் பகுதியில் வசித்துவந்த 40 வயதாக யண்ஜிங் பான் எனப்படும் பெண்ணின் சடலமே இது என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி இரவு 11 மணிக்குப் பின்னர், குறித்த பெண்காணவில்லை என்று கூறப்பட்ட நிலையில் தேடப்பட்டுவந்தார்.
தேடுதலுடன் அவர் தொடர்பிலான விசாரணைகளையும் முன்னெடுத்துவந்த பொலிஸார், சுமார் இரண்டு மாதங்களின் பின்னர், 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி, குறித்த அந்த பெண்ணைக் கொலை செய்ததான சந்தேகத்தின் பேரில் 51 வயதான ஷோஃபெங் ஹான் என்பவரைக் கைது செய்து, அவர் மீது இரண்டாம்தர கொலைக் குற்றச்சாட்டினைப் பதிவு செய்த போதிலும், அப்போதும் குறித்த அந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில், மிசிசாகாவின் மாட்ஸன் பவுல்வர்ட் மற்றும் கென்னடி வீதிப் பகுதியில் உள்ள காட்டுப் புறத்தில் மனித உடற்பாகங்களை கண்டெடுத்த அதிகாரிகள், தடயவியல் பரிசோதனைகளின் அடிப்படையில் அந்த உடற்பாகங்கள் யண்ஜிங் பான் உடையது என்பதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் பீல் பிராந்திய பொலிஸாரை அல்லது குற்றத் தடுப்பு பிரிவினரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.