உப்பு நீர் அடங்கிய இந்த செயற்கை ஏரியின் நீறம் இளஞ்சிவப்பாக மாறுவதற்கு ஒரு வகை நீர்ப்பாசியே காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
அதிகமான வெப்பம், சூரிய வெளிச்சம் ஆகியவற்றால் நீர்ப்பாசி நிறம் மாறியிருக்கிறது. இந்தநிலையில் ஏரியின் சிறப்பு வண்ணத்தைக் காண மக்கள் குவிந்து வருகின்றனர்.
வெப்பநிலை குறையும்போது ஏரி மீண்டும் வழமையான நிறத்துக்கு மாறிவிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன் 2017ஆம் ஆண்டு ஏரி நிறம் மாறியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, ஸ்பெயின், கனடா, செனகல் போன்ற நாடுகளிலும் இளஞ்சிவப்பு ஏரிகள் காணப்படுகின்றன.
அந்த ஏறிகளுக்கு செல்லும் மக்கள் ஒளிப்படம் எடுத்து தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.