பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த லொறி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த லொறி, ஷங்கிரி-லா ஹோட்டல் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறியே இன்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெல்லம்பிட்டி, நவகம்புர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த லொறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதேவேளை, லொறியில் வெடி பொருட்கள் இருந்ததா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட லொறி ஒன்று கொழும்பில் சுற்றிவருவதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் குறித்த லொறி இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, கொட்டாஞ்சேனை பகுதியிலும் சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட லொறி ஒன்றுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.