உள்ளூர் நேரப்படி இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணியுடன் நிறைவடையவுள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
துருக்கியில் அந்நாட்டு ஜனாதிபதி தையீப் எர்டோகனிற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை காரணமாக வாக்களிப்பு நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறிப்பாக ஆயுதமேந்திய பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, இன்றைய தினம் இடம்பெற்று வரும் உள்ளூர் தேர்தல் அந்நாட்டு ஜனாதிபதி தையீப் எர்டோகனிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
ஜனாதிபதி தையீப் எர்டோகனை பதவி விலகுமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வரும், அவர் தனது ஆட்சியை தக்கவைத்து கொள்ளவேண்டுமாக இருந்தால் இன்றைய தேர்தலில் அவர் அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.