மட்டக்களப்பு முகத்துவாரம்
சின்ன சவுக்கடி பகுதியில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினை மட்டக்களப்பு மாநகர சபை
தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு முகத்துவாரம்
சின்ன சவுக்கடி பகுதியில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினால் அப்பகுதியில்
பெரும் புகை மூட்டத்தை அவதானித்த அப்பகுதி மக்கள் உடனடியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு
அறிவித்துள்ளனர்
இதன் தொடர்ந்து மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம் .தயாபரன் தீ
அனர்த்தம் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர
முதல்வருக்கு தெரியபடுத்தியத்தை தொடர்ந்து
முதல்வரின் துரித நடவடிக்கையின் கீழ் மாநகர சபையின் தீ அணைக்கு
படையினரினால் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்
குறித்த தீ அனர்த்தம் தொடர்பாக தெரிவிக்கையில் தற்போதைய காலநிலை மாற்றத்தினால் காரணமாக
ஏற்பட்டுள்ளதா அல்லது தீய நாசகார செயல்பாட்டினால் ஏற்பட்டுள்ளதா என்பதனை தங்களால் அறிந்துகொள்ள
முடியாதுள்ளதாக தீயணைப்பில் ஈடுபட்ட தீயணைப்பு
படை உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்
மட்டக்களப்பு முகத்துவாரம்
சின்ன சவுக்கடி பகுதியில் ஏற்பட்ட தீ அனர்த்த பகுதியினை மட்டக்களப்பு மாவட்ட
அனர்த்த முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது