கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எம்முடன் ஒருங்கிணைந்து செயற்படக்கூடிய முஸ்லிம் சமூகமொன்றே எமக்கு வேண்டும். அரபு மொழி பேசும் முஸ்லிம் சமூகம் இலங்கைக்கு வேண்டாம்.
பயங்கரவாத தடை சட்டம் தற்போதும் நடைமுறையில் உள்ளது. அவசகால நிலையும் அமுலில் உள்ளது. அதற்கமைய இவ்விரு நியமங்களின் அடிப்படையில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். அதுமாத்திரமின்றி அதன் உறுப்பினர்களும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
அத்துடன், ஐ.எஸ். உள்ளிட்ட சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய, வெறுக்கத்தக்க பிரசாரங்களை மேற்கொள்ளும் அனைவரையும் தராதரம் பாராது கைது செய்யப்பட்டு அவர்களை தீவிரவாதிகள் என பெயரிட வேண்டும்.
அவர்கள் ஏதேனும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களாயின், அவற்றை அரசாங்கத்திற்கு சொந்தமாக்குமாறும் அரசாங்காத்தை கேட்டுக் கொள்கிறேன்” எனத் தொரிவித்தார்.