பெங்களூர் தும்கூரு சாலையிலுள்ள பி.ஐ.இ.சி மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.00 மணிக்கு பிரசார நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார்.
இந்த பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ்குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர்கண்ட்ரே மற்றும் ம.ஜ.த மாநில தலைவர் எச்.விஸ்வநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கர்நாடகத்தில் 28 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ், ம.ஜ.த ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றமை குறிப்பிடப்படத்தக்கது