LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, April 21, 2019

மிலேச்ச தனமான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது – செல்வம் அடைக்கலநாதன்!

கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில்
அப்பாவிமக்களை இலக்குவைத்து மேற்கொள்ளபட்ட தாக்குதல் சம்பவங்களானது மிலேச்சதனமான செயலென தமிழீழவிடுதலை இயக்கத்தின் தலைவரும் குழுக்களின் பிரதிதலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மற்றும் மத ஸ்தலங்கள்இ நட்சத்திர விடுதிகளில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களிற்கு தமிழீழ விடுதலை இயக்கம் தனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றது.

அப்பாவி மக்களை இலக்குவைத்து மேற்கொள்ளபட்ட இந்த சம்பவங்களானது மிலேச்சதனமான செயலென தமிழீழ விடுதலை இயக்கம் கருதுகின்றது. பல்வேறுதுன்பங்களை அனுபவித்த இலங்கை மக்கள் மீண்டும் இவ்வாறானதொரு அசம்பாவித நிலைக்கு தள்ளபட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாததாகவுள்ளது.

அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்களுடைய புனிதநாளான உயிர்த்த ஞாயிறு தினத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமையை வன்மையாக கண்டிப்பதுடன் இது நாட்டுமக்களை மீண்டும் ஒரு குழப்பநிலைக்கு இட்டுச்செல்லும் செயற்படாகவே அமைந்திருக்கிறது.

எனவே இந்தநேரத்தில் இலங்கை மக்கள் இனம், மதம், மொழி என்பவற்றை கடந்து ஒற்றுமையுடன் நாட்டின் ஸ்திரதன்மைக்கும், சமாதானத்திற்கும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டிய தருணம் ஏற்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7