எனினும், இனிவரும் காலங்களில் மக்கள் மின்சாரத்தை மட்டுப்படுத்தி சிக்கனமாக பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
மின் தடை ஏற்பட்டு இன்றுடன் 18 நாட்களாகின்றன. இதன் காரணமாக சாதாரண மக்கள் முதல் சிறிய மற்றும் பாரிய வர்த்தகத்தில் ஈடுபடுவோர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
எந்தவித முன்னறிவித்தலுமின்றி மின் தடை ஏற்படுவதால் தாங்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையிலேயே, அமைச்சர் இது குறித்து கருத்து தெரிவித்தார்.