அத்துடன், சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்பாட்டை உறுதிபடுத்தவும், செயல்படுத்தவும் புரூணேயை தொடர்ந்து வலியுறுத்தவுள்ளதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான இச்சட்டம் புரூணேயில் இன்று (புதன்கிழமை) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக அமெரிக்க அரசதுறை பேச்சாளர் றொபர்ட் பலடினோ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், புரூணேயின் செயற்பாடு சர்வதேச மனித உரிமைகளுக்கான கடப்பாடுகளுக்கு எதிரானது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், புரூணேயின் இந்நடவடிக்கையை கண்டித்து புரூணேக்கு சொந்தமான ஆடம்பல ஹோட்டல்களை புறக்கணிக்குமாறு ஒஸ்கார் விருதுபெற்ற நடிகர் ஜோர்ஜ் க்ளூனி அழைப்பு விடுத்துள்ளார்.