ஊர்களுக்கு மக்கள் செல்கின்ற நிலையில், ஒருநாளில் அரசாங்கத்திற்கு பெருந்தொகை வருமானம் கிடைத்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் 100 மில்லியன் ரூபாய் என்ற சாதனை வருமானம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி வருமானத்தில் இது தான் அதிகூடிய வருமானமாக கருதப்படுகின்றது.
ஏனைய வருடங்களை விடவும் அதிக பேருந்து பயணங்கள் நேற்று பதிவாகியுள்ளது. புத்தாண்டினை முன்னிட்டு விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்பட்டமையினால் அதிக பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பில் இருந்து ஏனைய பகுதிகளுக்கு சென்ற பயணிகளின் எண்ணிக்கையிலேயே பாரிய அதிகரிப்பு ஏற்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.