நியூசிலாந்து மசூதிகளில் நடைபெற்ற தாக்குதலின் தாக்கம் தீராத நிலையிலேயே, கனடாவில் இஸ்லாமியப் பெண்கள் தற்காப்புக் கலையை கற்று வருகின்றனர்.
ஒன்ராறியோவிலுள்ள உள்ள உள்ளூர் மசூதி ஒன்றிலேயே இஸ்லாமியப் பெண்கள் தற்காப்பு கலைகளைக் கற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் உடற்பயிற்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயிற்சிகள் தற்போது தற்காப்பு கலையாக பரிணமித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், இஸ்லாமிய பெண்கள் தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.