வனப்பகுதியில் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என இதன்போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களை நோக்கி யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் அதிகளவில் வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது வறட்சி நிலவி வருவதால் வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் யானைகள் தண்ணீர் தேடி கிராமங்களுக்கு வருவது அதிகரித்து வருகின்றது. இதன்காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.