தி.மு.க கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாகவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நிறைவுபெற்றுள்ள தேர்தல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே எடப்பாடி பழனிசாமி இதனை குறிப்பிட்டுள்ளார்.
அ.தி.மு.க.வின் ஆட்சியே தமிழகத்தில் தொடர்ந்து நிலவ வேண்டுமென்பதற்காகவே அதிகளவான மக்கள் கலந்துகொண்டு வாக்களித்துள்ளனர் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை சூறை காற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளை அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் மேற்கொள்வார்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஆனால் தேர்தல் சட்டம், அமுலில் உள்ளமையால் அதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை நடத்த முடியாத நிலைமை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும், நேற்று (வியாழக்கிழமை) தேர்தல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.