இயக்குநர் தமிழ்வாணன் இயக்கிவரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்த ஒரு ஒளிப்படத்தை அமிதாப்பச்சன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் சுவரில் சிவாஜி கணேசனின் புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய அமிதாப்பச்சன், “சிவாஜி கணேசன் என்ற ஆசானின் கீழ் அவரது சீடர்களாகிய நானும் சூர்யாவும் உள்ளோம். தமிழ் சினிமாவின் பொக்கிஷம் சிவாஜி கணேசன். அவருடைய படத்தை சுவரில் மாட்டி அவரது பாதம் தொட்டு வணங்கி மரியாதை செய்தோம். அவர் எமது ஆசான். நாம் அவருடைய சீடர்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.
சிவாஜி கணேசன் நடித்த ‘கை கொடுத்த தெய்வம்’ என்ற படத்தின் ஹிந்தி ரீமேக் படமான ‘பியார் கி கஹான்’ என்ற படத்தில் அமிதாப் நடித்துள்ளார். அத்துடன் தற்போது அவர் நடித்து வரும் ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தின் பெயரில் கடந்த 1968ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த படம் ஒன்று வெளியானமையும் குறிப்பிடத்தக்கது.