முயற்சி செய்கிறது என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) பிரசாரம் மேற்கொண்ட யோகி ஆதித்யநாத் பேசுகையில், “தேசத் துரோகம் தொடர்பான சரத்தை நீக்குவதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயலாகும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவில் வளங்கள் மீது இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உள்ளது என்று கூறியிருந்தார்.
இப்படிக் கூறுவதன் மூலம் இந்திய நாட்டு மக்களை அவமதிப்பு செய்தார். மக்களை இந்து மற்றும் இஸ்லாமியர் என பிரிக்க முயற்சி செய்தார். காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அரசியல் பற்றிப் பேசும். அவர்களை பொறுத்தவரையில் கட்சியின் வளர்ச்சிதான் முக்கியமாகும்.
இந்தியாவை பிளவுப் படுத்திய முஸ்லிம் லீக் கட்சியுடன் காங்கிரஸ் கொண்டிருக்கும் உறவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.