இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு அது தற்போது குழந்தை பருவத்தில் காணப்படுகின்றது.
அரசாங்கத்திற்கு இன்னும் ஒன்றறை வருடங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளது. இந்த எஞ்சியுள்ள காலத்திலாவது வடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை கொடுக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாது விட்டால் உளவியல் ரீதியாக ஏற்படுகின்ற தாக்கங்கள் மாற்றங்கள் தான் புரட்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் காரணமாக அமைந்திருக்கின்றன.
எனவே இந்த உளவியல் ரீதியாக ஏற்படுகின்ற தாக்கங்கள் கடந்த காலத்தில் தென்பகுதியிலும், ஜே.வி.பியினரின் ஒரு புரட்சியை ஏற்படுத்தியிருந்தது.
அதேபோன்றுதான் வடக்கு, கிழக்கு பகுதியிலும் இந்த விடுதலைப்புலிகளின் போராட்டம் நடைபெற்றிருந்தது. அந்த போராட்டங்கள் முடிந்து விட்டது என்றால் பிரச்சனைகள் முடிந்து விட்டது என்று நாங்கள் அர்த்தம் கொள்ள கூடாது என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.