ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான புரூணேயின் இஸ்லாமிய சட்டத்தை கண்டிக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புரூணேயில் ஓரினச்சேர்க்கை மற்றும் விபச்சாரத்தில் ஈடுபடுவோரை கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றும் கொடிய சட்டம் கடந்த புதன்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், புரூணே சுல்தானுக்கு சொந்தமான ஹோட்டல்களை புறக்கணிக்கும் இணைய பிரசாரம் பிரபல அமெரிக்க நடிகர் ஜோர்ஜ் க்ளோனியினால் ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாறாக புரூணேக்கு எதிரான இணையம் மூலமான விமர்சனங்கள் வலுப்பெற ஆரம்பித்ததன் பின்னரே புரூணே ஹோட்டல்களின் சமூக வலைத்தள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புரூணேயில் ஷரியா சட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்ப திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதத்திலும் இவ்வாறு ஹோட்டல் புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.