LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, April 28, 2019

தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நிதி சேகரிக்கும் தமிழ் சிறுமி!

இலங்கையில் அடுத்தடுத்து இடம்பெற்ற குண்டுவெடிப்புகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் சிறுமி நிதி சேகரித்து வருகின்றார்.

கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததுடன், 500 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமல்லாது நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இலங்கை மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களும் உயிரிழந்திருந்தனர்.

இந்தநிலையில் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் சிறுமி நிதி சேகரித்து வருகின்றமையை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவுக்கு தனது குடும்பத்துடன் பிரசாந்தி ரஜனிகாந்த் (17) கடந்த 2007ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தார். இவ்வாறு புலம்பெயர்ந்து சென்ற அவர் GoFundMe இணையதளம் ஊடாக நிதி வருகின்றார்.

அவர் வசூலிக்கும் நிதியானது கொழும்பிலுள்ள பொது மருத்துவமனை மற்றும் அசிரி மருத்துவமனைக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது.

இது குறித்து பிரசாந்தி கூறுகையில், என்னால் என்ன முடியுமோ அதை செய்கிறேன், அது தான் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி சேகரிக்கின்றேன்.

குண்டுவெடிப்பில் என்னுடன் முன்னர் படித்தவர்கள் இறந்தார்களா என எனக்கு தெரியவில்லை’ என கூறியுள்ளார். பிரசாந்தியின் தாய் வனிதா கூறுகையில், ‘என் மகளை நினைத்தால் பெருமையாக உள்ளது.

பிரசாந்தி குழந்தையாக இருக்கும் போது இலங்கையில் இருந்து நாங்கள் கனடாவில் குடிபெயர்ந்தோம். ஆனால் அந்த வலியை தற்போது அவள் உணர்ந்திருக்கிறாள்’ என கூறியுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7