தலைநகர் அங்காரா மற்றும் இஸ்தான்புல்லிலுள்ள மாவட்டங்களின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஜனாதிபதி தையீப் எர்டோகன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், குறித்த எட்டு மாவட்டங்களினதும் வாக்குகளை மீள எண்ணுவதற்கு துருக்கி தேர்தல் சபை இன்று (புதன்கிழமை) அனுமதி வழங்கியுள்ளது.
துருக்கி உள்ளூர் தேர்தலின் ஆரம்பகட்ட வாக்கெண்ணும் நடவடிக்கைகளின் பிரகாரம் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். ஜனாதிபதி எர்டோகனின் ஆளும் கட்சி பின்னடைவை எதிர்கொண்டது.
இந்த தேர்தல் பின்னடைவு பொருளாதார மந்தநிலையிலிருந்து நாட்டை மீட்கும் எர்டோகனின் முயற்சியிலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது