தேனி மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை உரையாற்றினார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தனிமனிதனின் அறிக்கையல்ல, எங்களது தேர்தல் அறிக்கை நாட்டு மக்களின் ஒருமித்த குரல். எங்கள் தேர்தல் அறிக்கையில் அனைத்து தரப்பு மக்களின் குரல் ஒலிக்கும். மக்களின் விருப்பத்தை உள்வாங்கி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீட் தேர்வு குறித்தும் குறிப்பிட்டோம். நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்து கொள்ளலாம். தமிழக மக்கள் விரும்பாததை எந்த சக்தியாலும் செயற்படுத்த முடியாது.
டெல்லியில் இருந்துகொண்டு தமிழகத்தை நிர்வகிக்க பிரதமர் மோடி விரும்புகிறார். மோடி வெறுப்பு அரசியலை வளர்த்து வருகிறார். வெறுப்பாலும் கோபத்தாலும் தமிழக மக்களை பணியவைக்க முடியாது. வெறுப்பு அரசியலை வீழ்த்துவோம். தமிழக மக்களை அவர் தொடர்ந்து அவமதிப்பதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது.
நமது கூட்டணி மிகப்பெரிய காரியங்களை செய்து முடிக்கவுள்ளது. நமது யுத்தம் 2 கருத்தியல்களுக்கு இடையிலான யுத்தம். நான் பொய் சொல்வதற்காக இங்கு வரவில்லை. ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் நான் புத்துணர்வு பெற்றதாக உணர்கிறேன். அடுத்த ஒரு மாதத்துக்குத் தேவையான புத்துணர்வு எனக்கு கிடைக்கிறது. தமிழ்நாட்டுக்கும் எனக்கும் உள்ள பந்தம் இதயபூர்வமானது” என்று தெரிவித்தார்.