சிகலா, சிறையிலேயே இருக்க வேண்டும் என்பதே ஆர்.கே.சட்டமன்ற உறுப்பினர் தினகரனின் எண்ணமென அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் நேற்று (திங்கட்கிழமை) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும்போதே கே.டி.ராஜேந்திரபாலாஜி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“எதிர்வரும் 23ஆம் திகதியின் பின்னர் யார் பக்கம் மக்கள் இருக்கின்றார்கள் என்பதை நன்றாக தெரிந்துக்கொள்ள முடியும்.
இதேவேளை சசிகலாவினால் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன், தேர்தல் பிரசாரத்தில் சசிகலாவின் பெயரை சிறிதளவேனும் பயன்படுத்தவில்லை.
மேலும் சிறையிலுள்ள சசிகலாவை, வெளியே கொண்டுவருவதற்கான முயற்சியை கூட அவர் மேற்கொள்ளவில்லை.
அத்துடன் கட்சி ஆதரவாளர்களை ஏமாற்றி, அரசியல் இலாபம் பெறவே தினகரன் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்” என ராஜேந்திரபாலாஜி குற்றம் சுமத்தியுள்ளார்.