சோனியா காந்தி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வகையில் இன்று(வியாழக்கிழமை) ரேபரேலி தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கடந்த 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என்ற கர்வத்துடன் பாஜகவினர் இருந்தனர். இந்தியா ஒளிர்கிறது என பிரச்சாரம் செய்தனர். மீண்டும் வாஜ்பாய் பிரதமர் பதவியில் அமர்வார் என்ற நம்பிக்கையுடன் பிரச்சாரம் செய்து வந்தனர்.
ஆனால் மக்கள் எங்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்தனர். பிரதமர் மோடி உட்பட பாஜகவினர் இப்போதும் அதே கர்வத்துடன் தேர்தலை அணுகுகின்றனர். ஆனால் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பர். நாங்கள் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது’ என தெரிவித்துள்ளார்.