நாகை மாவட்டம் வேதாரணியம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரப் பணிகளின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்தும் கேள்வியெழுப்பியிருந்தார்.
அத்துடன் பொங்கலுக்கு, வறுமைக்கோட்டிற்கு கீழ் செயற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 1000 ரூபாய் கொடுப்பனவு இனிவரும் காலங்களிலும் வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் பிரசார பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த காலப்பகுதியில் அண்மையில் பெண்கள் எதிர்நோக்கிய சில பிரச்சினைகளை குறிப்பிட்டு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் பா.ஜ.கா ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என காங்கிரஸ் ஆட்சி விமர்சித்திருந்ததும், தற்பொழுது உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பரப்புரையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் முன்வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.