தாக்குதலாளிகளின் முக்கிய நோக்கம் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஏற்பட்ட அசம்பாவிதத்துக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு கட்சி அரசியலை விட்டு குறுகிய காலத்துக்கேனும் தேசிய நிகழ்ச்சி நிரலுக்கேற்றவகையில் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அவசரகால சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தெரிவிக்கையில், “நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தகவல் கிடைக்கும்போது அதுகுறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் செயலாளருக்கே இருக்கின்றது. பொதுவாக அரசாங்கத்துக்கு இருக்கின்றது.
இவ்வாறான அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு துறையின் தகவல் கிடைத்தும் தாக்குதலை தடுக்க முடியாமல் போனது குறித்து அரசாங்கம் மக்கள் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
மேலும் இடம்பெற்ற விடயங்களின் மூலம் நாங்கள் கற்றுக்கொள்வதாக இருந்தால் ஆரம்பமாக இடம்பெற்ற தவறை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் இதனை ஆளுக்கு ஆள் குற்றஞ்சுமத்துவதன் மூலம் பொறுப்பில் இருந்து விலகமுடியாது.
ஆரம்பத்தில் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, நாட்டின் தேசிய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவகையில் அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்பட முன்வரவேண்டும்.
அத்துடன் நாட்டின் தற்போதைய சமாதான சூழ்நிலையில் இவ்வாறான பாரிய தாக்குதல் ஒன்று இடம்பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்ற நம்பிக்கையில் செயற்பட்டதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது. என்றாலும் இந்த நிலைமையை அடிப்படையாகக்கொண்டு சிலர் அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர். இதற்கு இடமளிக்கக் கூடாது” என்று தெரிவித்தார்