கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சியை பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரு கட்சிகளும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2020 ஆம் ஆண்டுவரை தனது பதவிக்கான காலவரையறை நீடிப்பதற்கும் அதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலை தள்ளிபோடுவதற்குமான முயற்சியை தாம் எதிர்ப்பதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த நாடு முழுவதும் இல்லையென்றால் சர்வதேச அளவிலும் அதற்கு எதிராக நடவடிக்கை இருப்போம் இல்லாவிடின் உயர் நீதிமன்றத்திற்கு சென்று தீர்வினை பெருகொள்ளுவோம் என ஜி.எல்.பீரிஸ் கூறினார்.
அத்தோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தயாசிறி ஜயசேகர, ஜனாதிபதி சிறிசேன, 21 ஜூன் 2020 ஆம் ஆண்டு வரை தனது பதவியை நீடிப்பது தொடர்பாக புதிய பிரதம நீதியரசரின் ஆலோசனையை நாடுவார் என்று கூறியதையும் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த தயாசிறி ஜயசேகர தனது அறிக்கை மூலம் தவறாகக் கூறியதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியால் எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கை அநீதியும் சட்டபூர்வமற்ற முறையில்தான் இருக்கும் என்றும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
ஐந்து ஆண்டுகளாக நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையை கட்டுப்படுத்தும் ஒரு அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் அப் பதவியை ரத்து செய்வதாக அறிவித்த ஒரு ஜனாதிபதியின் இந்த கால நீடிப்பு செயற்பாடு மிகவும் நியாயமற்றது என ஜே.வி.பி. யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தமானது ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலத்தை 6 இல் இருந்து 5 ஆண்டுகளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் வினவியபோது அவர் உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பை அறிவிக்கும்வரை இவ்விடயம் தொடர்பாக பேசுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதேவேளை உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்குவதற்கு முன்பு தான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் எப்படியிருந்தாலும் ஜனநாயகம் மீறப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாகவும் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.